தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அமெரிக்கா விடுத்துள்ள அழைப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அமெரிக்க அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
அரசியல் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக அமெரிக்கா விஜயம் செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
இதன்படி இந்த மாத இறுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூவர் அடங்கிய குழுவொன்று அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளது.
டொக்டர் நிர்மலா சந்திரதாசன், கே.கணகேஸ்வரன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் இவ்வாறு அமெரிக்கா விஜயம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் பற்றி விளக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நடைமுறையில் காணப்படும் சமஷ்டி முறைமை குறித்து ஆராயப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு சம்பந்தன் தலைமையிலான குழுவொன்று அமெரிக்கா விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.