தமிழரசு கட்சிக்குள் கொழும்பு மைய அரசியலா: தாயக மைய அரசியலா!

Sri Lankan Tamils Sri Lanka Sri Lankan political crisis
By Erimalai Jan 08, 2025 12:29 AM GMT
Report

தமிழரசு கட்சியின் அரசியல் கொழும்பு மைய அரசியலா? அல்லது தாயக மைய அரசியலா? என சட்டத்தரணியும், அரசியல் ஆய்வாளருமான சி.அ.யோதிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் வெளியிட்ட வாராந்த அறிக்கையிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 

“கடந்த டிசம்பர் மாதம் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் வவுனியாவில் இடம்பெற்றது. மண்டப வாசலுக்கு அருகே தமிழ் தேசியத்தை சிதைக்காதே! பொதுச்சபையைக் கூட்டு! என்ற வாசகங்கள் அடங்கிய பதாகை வைக்கப்பட்டிருந்தது.

கூட்டத்திற்கு வருகை தந்தவர்கள் பதாகையில் உள்ள சுலோகங்களை வாசித்த பின்னரே உள்ளே சென்றனர். கூட்டத்தில் பிரதானமாக மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இளங்குமரன் எம்பியால் மடக்கி பிடிக்கப்பட்ட வாகன விவகாரம்: நீதிமன்று வழங்கிய உத்தரவு

இளங்குமரன் எம்பியால் மடக்கி பிடிக்கப்பட்ட வாகன விவகாரம்: நீதிமன்று வழங்கிய உத்தரவு

சுமந்திரன் என்ற தனிநபர்

கட்சியின் பதில் தலைவராக சி.வி. கே சிவஞ்ஞானம் நியமிக்கப்பட்டமை, சில மத்திய குழு உறுப்பினர்களின் உறுப்புரிமை நீக்கப்பட்டமை, கட்சியில் ஊடகப் பேச்சாளராக சுமந்திரனை நியமித்தமை என்பனவே அவ் மூன்றுமாகும்.

இந்த மூன்று தீர்மானங்களும் சுமந்திரன் என்ற தனிநபரின் அரசியல் நிலைப்பாட்டிற்கு பலம் சேர்ப்பதற்காக எடுக்கப்பட்ட தீர்மானங்களாகும். அவருடைய அரசியல் நிலைப்பாடு என்பது தமிழ்த் தேசியம் நீக்கப்பட்ட கொழும்பு மைய அரசியல் தான்.

கட்சியின் உறுப்புரிமை நீக்கப்பட்டவர்கள் அனைவரும் சுமந்திரன் அரசியல் நிலைப்பாட்டை காரசாரமாக எதிர்த்தவர்களே.

இதற்கு முன்னர் கட்சியின் தலைவருடன் கூட கலந்தாலோசிக்காமல் கட்சியின் கொழும்புக் கிளையையும் தன்னுடைய ஆட்களை கொண்டு அவர் நிரப்பியிருந்தார்.

மாவை சேனாதிராஜா மீது பல விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அவர் போராட்ட அரசியலுக் கூடாக வளர்ந்த ஒரு மூத்த தலைவர். பல வருடங்கள் சிறைவாசம் அனுபவித்தவர்.

சுமந்திரன், சாணக்கியன் போல இறக்குமதி செய்யப்பட்டவர் அல்லர். போராட்டத்தின் வலி சுமந்திரனுக்கும் தெரியாது. சாணக்கியனுக்கும் தெரியாது. சுமந்திரன் கொழும்பில் பிறந்து வளர்ந்தவர்.

சிங்கள தரப்புடன் சம்பந்த உறவு கொண்டவர். அவரது இரண்டு புதல்வர்களும் சிங்களத் தரப்பிலேயே திருமணம் செய்துள்ளனர். சாணக்கியன் கண்டியில் பிறந்து வளர்ந்து அவுஸ்திரேலியாவில் படித்தவர்.

மக்கள் சார் அரசியல் கலாசாரத்தை உருவாக்குவோம்: எதிர்கட்சி தலைவர் தெரிவிப்பு

மக்கள் சார் அரசியல் கலாசாரத்தை உருவாக்குவோம்: எதிர்கட்சி தலைவர் தெரிவிப்பு

தாயகமைய அரசியல்

இருவருமே தாயகத்தில் வாழ்ந்த காலம் குறைவு. இல்லை என்றே கூறலாம். சாணக்கியன் திருமணம் செய்யப் போகும் பெண்ணும் சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர்.

நாடாளுமன்ற உறுப்பினராக வரவில்லை என்றால் இருவரும் தமிழர் தாயகத்தை நினைத்தே பார்த்திருக்க மாட்டார்கள். சுமந்திரன் சில வேளை தொழிலுக்காக தாயகப் பக்கம் வந்திருக்கக்கூடும்.

அவர்கள் விரும்பினாலும் அவர்களது இருப்பு காரணமாக தாயகமைய அரசியலை ஒருபோதும் முன்னெடுக்க முடியாது. தமிழரசுக் கட்சி சுமந்திரன் பிரிவு, சிறீதரன் பிரிவு என இரண்டாக பிரிந்து இருப்பது யாவரும் அறிந்ததே!

தமிழரசு கட்சிக்குள் கொழும்பு மைய அரசியலா: தாயக மைய அரசியலா! | Tna Political Position

இந்தப் பிளவு வெளித் தோற்றத்திற்கு மத்திய குழுவிற்குள் இடம் பெறும் தனிநபர் தலைமைப் பிரச்சினை போல தெரியலாம். ஆனால் உண்மை அதுவல்ல. இரண்டு பெரிய கொள்கை நிலைப்பட்ட முரண்பாடுகள் அங்கு உண்டு.

அதாவது இறைமை, சுயநிர்ணயம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட தாயக மைய அரசியலுக்கும் தமிழ்த் தேசிய நீக்கத்தை அடிப்படையாகக் கொண்ட கொழும்பு மைய அரசியலுக்கும் இடையேயான முரண்பாடே அதுவாகும். இந்த இரு கொள்கை நிலைப்பாட்டிற்கும் இடையிலான போராட்டம் தமிழரசுக் கட்சியின் வரலாறு முழுவதும் இடம்பெற்றிருந்தது.

கொழும்பு மைய அரசியல்காரர்களின் இருப்பு கொழும்பை மையமாகக் கொண்டு இருப்பதால் அந்த இருப்புக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலான அரசியலையே அவர்கள் நகர்த்த முனைவர்.

நீலன் திருச்செல்வம் போன்ற வகையறாக்கள் அந்த பிரிவுக்குள்ளேயே அடங்கியிருந்தனர். வரலாற்றில் சம்பந்தன் தலைமைக்கு வரும்வரை தாயக மைய அரசியல் பலமாக இருந்தபடியால் அதனை மீறி கொழும்பு மைய அரசியல் கட்சிக்குள் வளர முடியவில்லை. 1976ம் ஆண்டின் தனிநாட்டுத் தீர்மானத்தையும் கொழும்பு மைய அரசியல் காறர்கள் விரும்பியிருக்கவில்லை.

சம்பந்தன் தலைமை நிலைக்கு வந்த பின்னரே கொழும்பு மைய அரசியல் காறர்கள் மேல்நிலைக்கு வந்தனர். சுமந்திரன் போன்றவர்கள் இதற்காகவே இறக்குமதி செய்யப்பட்டனர்.

விக்னேஸ்வரனும் இதற்காக கொண்டுவரப்பட்டாலும் அவர் இந்த அரசியலுக்குள் அகப்படவில்லை. சம்பந்தன் தலைமைக்கு வந்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக தாயகமைய அரசியலை நீக்கி கொழும்பு மைய அரசியலை வளர்க்க முற்பட்டார்.

முதலில் கட்சியை அதற்கேற்றவாறு மாற்றி பின்னர் மக்களை மாற்றுவதே அவர்களது இலக்காக இருந்தது. தற்போது சம்பந்தன் இல்லை. சுமந்திரன் அந்த தொடர்ச்சியை மேற்கொண்டுள்ளார்.

ஆனால் கள யதார்தம் நீண்ட காலம் இதற்கு இடம் கொடுக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிதைவுக்கு இதுவே காரணமாயிற்று.இது தமிழரசுக் கட்சியின் சிதைவையும் நோக்கி வளர்ந்த போது கட்சியின் ஒரு பகுதியினர் விழித்துக் கொண்டு போராடத் தொடங்கினர்.

சுமந்திரன் - சிறீதரன் முரண்பாட்டின் வரலாறு இதுதான். கழுதை தேய்ந்து கட்டெறும்பாக வந்தது போல தமிழரசுக் கட்சி வந்ததற்கும் இதுவே காரணமாகும். தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வரும் வரை தாயகமைய அரசியல் அவசியமானதாகும். இதன் மூலம் தமிழ்த் தேசிய அரசியலையும் அதன்வழி எதிர்ப்பு அரசியலையும் பாதுகாக்க முடியும்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு மீண்டும் தலைவராகியுள்ள தமிழர்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு மீண்டும் தலைவராகியுள்ள தமிழர்

டக்ளஸ் தேவானந்தா

டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்த அரசியலும் கொழும்பு மைய அரசியல் தான். டக்ளஸ் தேவானந்தாவை ஆதரித்தவர்கள் தற்போது தேசிய மக்கள் சக்தியை ஆதரிக்க தொடங்கியுள்ளனர்.

புறோக்கர் மூலம் கொழும்பு மைய அரசியலை முன்னெடுப்பதை விட நேரடியாக கொழும்பு மைய அரசியலை முன்னெடுப்போம் என கருதி தேசிய மக்கள் சக்தியை ஆதரிக்க தொடங்கியுள்ளனர். தமிழரசுக் கட்சியும் கொழும்பு மைய அரசியலை பின்பற்றுமாக இருந்தால் அதன் ஆதரவாளர்களும் புறோக்கர் தேவையில்லை எனக் கருதி நேரடியாக தேசிய மக்கள் சக்தியை ஆதரிக்க முற்படலாம்.

தமிழரசு கட்சிக்குள் கொழும்பு மைய அரசியலா: தாயக மைய அரசியலா! | Tna Political Position

தலைவர் பதவிக்கான போட்டியில் சுமந்திரன் தோற்றமைக்கும் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றமைக்கும் அவரது கொழும்பு மைய அரசியல் தான் காரணம். இரண்டிலும் தோல்வியுற்ற சுமந்திரன் அதிலிருந்து பாடத்தை கற்றுக்கொண்டு திருந்தியிருக்க வேண்டும். ஆனால் அவரது கொழும்பு இருப்பு அவரை திருந்த விடவில்லை. கட்சி சிதைந்தாலும் பரவாயில்லை.

கொழும்பு மைய அரசியலுக்கு தாயகத்தில் ஒரு இடத்தைப் பிடிப்பதே அவரது நோக்கம். கொழும்பு மைய அரசியல் என்பது சாராம்சத்தில் இணக்க அரசியல் தான். இன்னோர் வார்த்தையில் கூறுவதாயின் எஜமானுக்கு முதுகு தடவும் அரசியல்.

இது தமிழ்த் தேசிய மரபுக்கு உட்பட்டதல்ல. மாவை சேனாதிராஜா தலைமைப் பதவியை முதலில் பதவி விலகல் செய்யப் போவதாக கூறினாலும் பின்னர் அதனை மீள பெற்றிருந்தார். அவர் பதவி விலகல் செய்வதாக் கூறியமைக்கும் கூட தலைவருடன் பெரியளவுக்கு கலந்தாலோசிக்காமல் சுமந்திரன் தனித்து தீர்மானங்களை எடுத்தமையே காரணமாகும்.

இந்த பதவி விலகல் கடிதத்திலும் சிறீதரன் தலைமைப் பொறுப்பை ஏற்கும் படியே அவர் கேட்டிருந்தார். ஒரு மூத்த தலைவர் பதவி விலகலை மீள பெறுகின்றேன் என கூறிய போது அதை ஏற்றுக் கொள்வதே தார்மீக அறநெறியாகும்.

சரி தீர்மானம் எடுப்பதாயினும் கூட தலைவரை தெரிவு செய்வது பொதுச் சபை தான். எனவே குழப்பமான சூழலும் நிலவுவதால் பொதுச் சபையைக் கூட்டி தீர்மானத்தை எடுத்திருக்கலாம். பொதுச்சபையில் தனது நோக்கத்திற்கு வாய்ப்பில்லை என கருதியமையினாலேயே மத்திய குழு மூலம் மட்டும் காரியத்தை முடிக்கும் நடவடிக்கையில் சுமந்திரன் இறங்கியிருந்தார்.

சரி தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டியிருப்பினும் கூட ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட தலைவராக அதுவும் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்ட தலைவராக சிறீதரன் இருப்பதால் அவரை தெரிவு செய்திருக்கலாம். சிறீதரன் தலைவராக வந்தால் கொழும்பு மைய அரசியலை நகர்த்த முடியாது என்பதற்காகவே சி.வி கே. சிவஞ்ஞானம் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இது எதிர்காலத்தில் சி.வி.கே. சிவஞானத்தையும் அவமானப்பட வைக்கப் போகின்றது சாணக்கியன் ஊடக நேர்காணலில் கட்சியின் சீரழிவுக்கு மாவையே காரணம் என குற்றம் சாட்டியிருந்தார்.

முன்னரே கூறியது மாவை தொடர்பாக பல விமர்சனங்கள் உண்டு. குறிப்பாக தனது ஆளுமையை வெளிப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டுகள் உண்டு. ஆனால் கட்சியின் சீரழிவுக்கு மாவை காரணமல்ல.

சுமந்திரனதும் சாணக்கியனதும் கொழும்பு மைய அரசியலே காரணமாகும். சுமந்திரன் அணியின் பிரதான தளபதியாக சாணக்கியன் இருப்பதால் அவரால் அவ்வாறு தான் கூற முடியும் இன்னோர் நேர்காணலில் வளர்த்த கடா மார்பில் பாய முற்பட்டுள்ளதே என்ற கேள்விக்கு மாவை தன்னை வளர்க்கவுமில்லை தான் பாயவும் இல்லை என கூறியிருக்கின்றார்.

ட்ரூடோவின் பதவி விலகலை கொண்டாடும் கனேடிய மக்கள்

ட்ரூடோவின் பதவி விலகலை கொண்டாடும் கனேடிய மக்கள்

பொது வேட்பாளர் 

தான் வேட்பாளராக நிற்பதற்கு சம்பந்தனும் துரைராஜசிங்கமுமே காரணம் மாவை அல்ல எனக் கூறியிருக்கின்றார். மாவை கட்சியின் தலைவராக இருக்கின்ற நிலையிலும் அவர் சம்மதம் தெரிவிக்கவில்லையென்றால் அவரால் வேட்பாளராக வந்திருக்க முடியுமா? என்ற கேள்விக்கு அவரிடமிருந்து பதில் ஏதும் இல்லை.

தமிழரசு கட்சிக்குள் கொழும்பு மைய அரசியலா: தாயக மைய அரசியலா! | Tna Political Position

மாவை சம்மதம் தெரிவிக்காவிடினும் தான் வேட்பாளராக நின்றிருப்பேன் என்று கூறினால். தலைவரை கணக்கெடுக்காமல் சம்பந்தனும் துரைராஜாசிங்கமும் தீர்மானங்களை எடுக்கும் நிலையில் இருந்திருந்தனர் என்பதை அவர் ஏற்றுக் கொண்டிருக்கின்றார் என்றே அர்த்தப்படும். இரண்டாவது தீர்மானமாக சுமந்திரனின் தீர்மானங்களை எதிர்த்து செயற்பட்டவர்கள் மத்திய குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அரியநேந்திரன், தவராசா, சரவண பவன், சிவமோகன் என்போர் இதில் உள்ளடக்கம். அரியநேந்திரன் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்டமைக்காக நீக்கப்பட்டுள்ளார்.

அதாவது சஜித் பிரேமதாச ஆதரவு நிலைக்கு எதிராக செயல்பட்டமையால் நீக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது தொடர்பாக கட்சிக்குள் இரண்டு நிலைப்பாடு இருந்தது.

கட்சியில் ஒரு பகுதியினர் பொது வேட்பாளர் வெற்றிக்காக களத்தில் இறங்கி செயல்பட்டிருந்தனர். சுமந்திரன் பிரிவினர் மட்டும் சஜித் பிரேமதாசவை ஆதரித்தனர்.

இது முக்கியமான தமிழ் அரசியலின் எதிர்காலத்தை பாதிக்கும் விடயமாக இருந்தபடியால்; தார்மீக அறநெறிப்படி மத்திய குழு தீர்மானத்தை எடுக்க முடியாது. பொதுச்சபையே எடுத்திருக்க வேண்டும்.

பொதுச் சபையில் இதனை எடுக்க முடியாது என்பதனாலேயே மத்திய குழுவில் அவசரம் அவசரமாக தீர்மானம் எடுக்கப்பட்டது. யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் பொது வேட்பாளரே அதி கூடுதலான வாக்குகளைப் பெற்றிருந்தார். கிளிநொச்சியையும் சேர்த்த யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் சஜித் பிரேமதாசவை விட 6000 வாக்குகளையே பொது வேட்பாளர் குறைவாக பெற்றிருந்தார்.

சஜித் பிரேமதாசவின் வாக்குகளுக்குள் சந்திரகுமாரின் வாக்குகளும், ஐக்கிய தேசியக் கட்சியின் பாரம்பரிய வாக்குகளும் உள்ளடக்கம்.

எனவே இவற்றையும் இணைத்துப் பார்க்கின்ற போது யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திலும் கூட தமிழ்த் தேசிய வாக்குகள் பொது வேட்பாளருக்கே அதிகளவில் அளிக்கப்பட்டுள்ளன. தவிர இவ்வாறான விடயங்களில் தீர்மானங்களை எடுக்கும் போது மக்களிடம் போதிய கலந்துரையாடல்களை நடாத்தியிருக்க வேண்டும்.

ஆனால் சுமந்திரன் தன்னிச்சையாகவே முடிவுகளை எடுத்திருக்கின்றார். தவராசா, சரவணபவன் போன்றவர்களும் பொது வேட்பாளர்களை ஆதரித்தவர்கள் என்பதற்காகவும், பொதுத் தேர்தலில் சுயேச்சை குழுவில் போட்டியிட்டார்கள் என்பதற்காகவுமே நீக்கப்பட்டுள்ளனர். இதில் பொது வேட்பாளருக்கான தெரிவின் போது தவராசாவின் பெயரும் அதில் அடங்கியிருந்தது.

அவர்கள் சுமந்திரனின் தன்னிச்சையான செயல்பாட்டிற்கு எதிராக கட்சிக்குள் இருந்து போராடியிருந்தார்கள். அது முடியாத போதே தனிப்பாதையை தெரிவு செய்தனர். குறிப்பாக சுமந்திரனின் தனது வெற்றிக்காக தனது அடியாட்களை வேட்பாளராக நிறுத்திய போது அதற்கு கடுமையான எதிர்ப்பை அவர்கள் காட்டியிருந்தனர்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு மீண்டும் தலைவராகியுள்ள தமிழர்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு மீண்டும் தலைவராகியுள்ள தமிழர்

கொழும்பு மைய அரசியல்

அவர்கள் இவ்வாறு தனித்த பாதையை நோக்கி சென்றமைக்கு சுமந்திரனின் கொழும்பு மைய அரசியலே காரணமாகும் . சிவமோகன் கடைசி மத்திய குழுக் கூட்டத்திற்கும் சென்றிருந்தார்.

பொதுத்தேர்தல் காலத்தில் கட்சியின் வேட்பாளருக்கு எதிராக செயல்பட்டிருந்தார் எனக் கூறியே அவர் நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றார் அவ்வாறு செயல்பட்டிருந்தால் கடைசிக் கூட்டம் வரை மத்திய குழுக் கூட்டத்திற்கு ஏன் அவரை அனுமதித்திருந்தீர்கள் இதற்கு சுமந்திரனிடம் பதில் ஏதும் இல்லை. மொத்தத்தில் கட்சியில் ஒரு சுத்திகரிப்பு வேலையை சுமந்திரன் தொடங்கியிருக்கின்றார்.

தமிழரசு கட்சிக்குள் கொழும்பு மைய அரசியலா: தாயக மைய அரசியலா! | Tna Political Position

தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டிற்கு எதிரானவர்களை அதாவது கொழும்பு மைய அரசியலுக்கு எதிரானவர்களை கட்சியில் இருந்து அகற்றுவதே அவரின் இலக்காகும். இது ஒரு வகையில் சிறீதரனை தனிமைப்படுத்தி அகற்றும் நோக்கத்தையும் உள்ளடக்கியதாகும். எதிர்காலத்தில் சிறீதரனை அகற்றும் செயற்பாட்டில் அவர் இறங்கலாம். சிறீதரனும் பொது வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட்டவர் என்பதை காரணம் காட்டி ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்க முனையலாம்.

அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினையும் பறிக்க முற்படலாம்; சிறீதரனுக்கு நிரந்தரமான வாக்கு வங்கி இருக்கின்றது என்பதனாலே சற்றும் தயக்கம் காட்டும் நிலை காணப்படுகின்றது.

இந்தப் போராட்டத்தில் சிறீதரன் தனது ஆளுமையை காட்ட முற்படவில்லை. பொதுச் சபை உறுப்பினர்களை திரட்டி கொண்டு வலுவான உட்கட்சி போராட்டத்தை நடாத்தியிருக்கலாம். ஆனால் அவர் அதில் பெரிய முனைப்பை காட்டவில்லை.

சுமந்திரன் நிகழ்ச்சி நிரலுக்கு பின்னால் இழுபட்டுச் செல்லும் நிலையே காணப்படுகின்றது. கட்சிக்குள் சிறீதரன் தோற்கப் போகின்றார். அது சிறீதரனின் தோல்வியாக மட்டும் அமையப்போவதில்லை மாறாத தாயக மைய அரசியலின் தோல்வியாகவே அமையும் அதன் வழி தமிழ் தேசிய அரசியலின் தோல்வியாக அமையும் அடுத்த வாரம் தமிழரசு கட்சியின் சிதைவினால் தமிழ் தேசிய அரசியலுக்கு ஏற்பட போகும் ஆபத்தை பார்ப்போம்...” என்றுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்

பெரியநீலாவணை, கல்முனை

22 Jan, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், Moissy-Cramayel, France

16 Jan, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், London, United Kingdom

17 Jan, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், வட்டகச்சி, Brampton, Canada

21 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay North, கொழும்பு, கனடா, Canada

23 Jan, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், பரந்தன், Chur, Switzerland, Markham, Canada

21 Jan, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், பிரித்தானியா, United Kingdom

20 Jan, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வவுனிக்குளம், Toronto, Canada, Ottawa, Canada

04 Feb, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, பிரான்ஸ், France, London, United Kingdom

23 Jan, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி இராமநாதபுரம், England, United Kingdom

23 Jan, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், பக்ரைன், Bahrain, Varel, Germany

22 Jan, 2024
மரண அறிவித்தல்

அப்புத்தளை, சங்குவேலி, பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

21 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கம்பளை, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம்

22 Jan, 2024
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Vincennes, France

15 Jan, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, London, United Kingdom, South Wales, United Kingdom

19 Jan, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Buxtehude, Germany

21 Jan, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு 6

20 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

22 Jan, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், வெள்ளவத்தை

21 Jan, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில், கொக்குவில், Scarborough, Canada

24 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Mississauga, Canada

23 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்குழி, பேர்ண், Switzerland

26 Jan, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, நியூஸ்லாந்து, New Zealand, அவுஸ்திரேலியா, Australia

22 Jan, 2000
அகாலமரணம்

மண்டைதீவு, புளியங்கூடல், Paris, France

20 Dec, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mönchengladbach, Germany

18 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada, வவுனியா

21 Jan, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், பிரான்ஸ், France

20 Jan, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், முரசுமோட்டை, சுவிஸ், Switzerland

21 Jan, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland

17 Jan, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

13 Jan, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சேரியடி, Luzern, Switzerland

30 Jan, 2005
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, London, United Kingdom

16 Jan, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், மெல்போன், Australia

16 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி வடக்கு, Måløy, Norway, Oslo, Norway

15 Jan, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உயிலங்குளம், Strengelbach, Switzerland

18 Jan, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கிளிநொச்சி, Eastham, United Kingdom, பேர்ண், Switzerland

20 Jan, 2022
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US