காலிஸ்தான் பிரிவினைவாதிகள் போல் கடிதம் எழுதிய சம்பந்தன்: எழுந்தது புதிய சர்ச்சை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய சமீபத்திய கடிதத்தில் பயன்படுத்தியுள்ள சொற்களஞ்சியம், காலிஸ்தான் பிரிவினைவாதிகள் பயன்படுத்தும் மொழிக்கு ஒத்ததாக இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்ட இளைஞர் கட்சியான புதிய மக்கள் முன்னணி, கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகருக்கு எழுதிய கடிதத்தில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் பயன்படுத்துவதைப் போன்றே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது பயன்படுத்தும் சொற்களஞ்சியம், இரு நாடுகளிலும் உள்ள பிரிவினைவாதக் கூறுகளை ஏற்படுத்துகிறது.
எனவே இதனை முறியடிக்க இந்தியாவும் இலங்கையும் கைகோர்க்க வேண்டும் என்று இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கு இந்த அமைப்பினால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
சமீப காலங்களில் பல ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்புகளுடன் வெளிச்சத்திற்கு வந்த புதிய மக்கள் முன்னணி, நாடாளுமன்றத்தில் அதிக இளைஞர் பங்கேற்பை வலியுறுத்துகிறது.
இலங்கையின் நிலைப்பாடு
அத்துடன் தமது உறுப்பினர்களில் 80 வீதமானோர் பேர் 40க்கும் குறைவானவர்கள் என்று அந்தக்கட்சி கூறுகிறது.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பிளவை ஏற்படுத்துவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாரம்பரியமாக இருந்து வருகிறது.
மேலும் இலங்கையர் ஒருவர் விஜயம் செய்வதற்கு முன்னதாக இந்திய அரச தலைவர்களுடன் கடிதப் பரிமாற்றங்களைத் தொடங்குவது அந்த கட்சியின் வழக்கம் என்றும் புதிய மக்கள் முன்னணி குறிப்பிட்டுள்ளது.
அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளார். எனினும் அதேவேளை, இலங்கையின் நிலைப்பாட்டை கடிதத்தின் மூலம் திரிபுபடுத்துவதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு முயற்சிப்பதாக புதிய மக்கள் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.
எனவே,இந்திய அரசாங்கம் இனியும் இந்திய-இலங்கை உறவுகளை சீர்குலைப்பவர்களாக மாறுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இந்திய அரசாங்கம் இடமளிக்க கூடாது என்று புதிய மக்கள் இந்திய அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




