தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினருக்கு பயங்கரவாத விசாரணை பிரிவு அழைப்பு
இலங்கை தமிழரசு கட்சியின் (ITAK) மத்திய செயற்குழு உறுப்பினர் ஒருவரை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவிற்கு வருமாறு பயங்கரவாத விசாரணை பிரிவினரால் இன்று (29) அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு (Mullaitivu) - மணல் குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் பீற்றர் இளஞ்செழியன் என்பவரையே இவ்வாறு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளது.
விசாரணை
இந்தநிலையில், எதிர்வரும் ( 01.02.2025) ஆம் திகதி அளம்பில் பொலிஸ் நிலையத்தில் அமைந்திருக்கும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் முல்லைத்தீவு உப பிரிவிற்கு சமூகமளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பாணையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் முல்லைத்தீவு உப பிரிவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றினை பெற்றுக் கொள்வதற்காக கீழ் குறிப்பிடப்படும் நபரினை ஒன்று 01.02.2025 ஆம் திகதி காலை 10 மணிக்கு அளம்பில் பொலிஸ் நிலையத்தில் அமைந்திருக்கும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் முல்லைத்தீவு உப பிரிவிற்கு வருகை தருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கணவரை பிரிந்த நிலையில் ஹன்சிகா எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. அதுவும் யாருடன் தெரியுமா? Cineulagam
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri