இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்ட கிளை நிர்வாகத்தில் மாற்றம்
இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்டக்கிளைக்கான புதிய நிர்வாக குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு பம்பலபிட்டி சனசமூக நிலையத்தில் நேற்று (13.11.2023) இடம்பெற்ற கூட்டத்தில் புதிய நிர்வாக குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மீண்டும் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
செயலாளராக மிதிலைச்செல்வி ஸ்ரீபத்மநாதன், உபதலைவர்களாக 1.செ.திருச்செல்வன் 2. க.நித்தியானந்தம், உபசெயலாளராக பத்மினி சதானந்தன், பொருளாளராக ப.பரமேஸ்வரன் மற்றும் உபபொருளாளராக சி.கந்தசாமி. ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
வெற்றிகரமான வேலை திட்டங்கள்
தலைவராக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா உரையாற்றுகையில்,
தமிழ் தேசியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் தமிழரசு கட்சி பாதுகாக்கப்பட வேண்டும். தமிழரச கட்சி பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் தமிழ் தேசியவாதிகள் அர்ப்பணிப்போடு மக்களுக்கான அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும். தமிழ் பேசும் மக்களில் ஒரு பெண் உறுப்பினர் கூட நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்காதது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
எதிர்காலத்தில் இந்நிலை மாற்றப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் நடப்பாண்டு நிர்வாக குழு தமிழ் தேசியத்தை நிலை நிறுத்துவதில் அர்ப்பணிப்போடு பங்காற்றும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் புதிய தலைமுறையில் இளைஞர் யுவதிகளை முன்னிறுத்தி பல்வேறு வெற்றிகரமான வேலை திட்டங்களை முன்னெடுப்பதற்கான முயற்சிகள் புதிய நிர்வாக குழுவினால் மேற்கொள்ளப்படும் என்று எதிர்ப்பார்க்கபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
