இந்திய - இலங்கை கடற்றொழில் பிரச்சினைக்கு தீர்வு: விரைவில் நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தை
இந்திய - இலங்கை கடற்றொழில் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பது குறித்த முறையான கோரிக்கையை இலங்கை கடற்றொழில் மற்றும் வெளிவிவகார அமைச்சர்களிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக இந்திய (India) பாரம்பரிய கடற்றொழிலாளர்கள் சங்க தலைவர் அ. அன்னராசா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
"தமிழக (TN) - இலங்கை (Sri Lanka) வட மாகாண கடற்றொழிலாளர் சமூகத்தினரிடையே மீண்டும் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க முடியும்.
இந்தியாவில் புதிய அரசாங்கம் பதவியேற்கும் வரையான காலத்துக்குள் தமிழக மற்றும் இலங்கையின் வடமாகாண கடற்றொழிலாளர்கள் சந்திப்பினை ஏற்படுத்தலாம்.
கச்சத்தீவு விவகாரம்
மேலும், 2016 நவம்பரில் புதுடெல்லியில் தமிழக - இலங்கை பேச்சுவார்த்தையின் கடைசி சுற்று நடந்தது” என கூறியுள்ளார்.
இந்நிலையில், முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய நான்கு மாவட்டங்களிலும் உள்ள பாரம்பரிய கடற்றொழிலாளர் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் அன்னலிங்கம் அன்னராசாவினால் 'தனது தரப்பினர் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கின்றனர்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது மாத்திரமன்றி, அண்மையில் இந்திய அரசியல் ஆர்வலர் ஒருவரினால் 'கனவாகிப்போன கச்சத்தீவு' என்னும் தமிழ் புத்தகத்தின் திருத்தப்பட்ட பதிப்பு வெளியிடப்பட்டது.
குறித்த நூலில் பாக்கு நீரினையில் நிலவும் கடற்றொழில் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam
