தனியார் நிறுவனங்களை இணைக்க திட்டம்: தொலைத்தொடர்பு சட்டத்தில் ஏற்படவுள்ள மாற்றம்
இலங்கையில் தொலைத்தொடர்பு கோபுரங்களை நிர்மாணிப்பதற்கு சுயாதீன நிறுவனங்களை அனுமதிக்கும் வகையில், நாட்டின் தொலைத்தொடர்பு சட்டங்களை திருத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
தற்போதைய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையச் சட்டத்தின் கீழ், உரிமம் பெற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களால் மட்டுமே கோபுரங்களை நிர்மாணிக்க முடியும்.
இந்நிலையில், கோபுர நிர்மாணிப்பை மூன்றாம் தரப்பினருக்கு வழங்குவது உள்ளிட்ட திருத்தங்களை இலங்கை அரசாங்கம் முன்வைத்துள்ளது.
தொலைத்தொடர்பு கோபுரங்கள்
இதற்கமைய, அரசாங்கத்தின் இலக்குகளை அடைவதற்கு கோபுரங்களை அமைக்கும் பணிகளை விரைவுப்படுத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, குறித்த திட்டத்திற்கு திருத்தங்கள் அவசியமாகின்றன என்று தொலைத்தொடர்புகள் இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்தை (Kanaka Herath) மையப்படுத்தி டெவலொப்பிங் டெலிகொம் (Developing Telecom) என்ற இணையம் தெரிவித்துள்ளது.
மேலும், இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவானது 276 புதிய கோபுரங்களை நிர்மாணிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக கூறியுள்ளது.
அதேவேளை, இது இணைய வசதிகளை மேம்படுத்துவதற்கும் 5ஜியின் வெளியீட்டிற்கு உதவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக 2023இல் 50 கோபுரங்கள் மட்டுமே நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
