தமிழகமே எதிர்ப்பார்த்த தேர்தல்! பிற்பகல் 3 மணிவரையான வாக்குபதிவு நிலவரம்..
புதிய இணைப்பு
தமிழக சட்டசபை தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்கு பதிவு சதவீதம் மற்றும் பதிவான மொத்த வாக்குகள் தமிழ்நாட்டில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.
இதுவரை 4,01,40,304 பேர் வாக்களித்துள்ளனர்.
சென்னையில் வாக்குப்பதிவு -68.13% வாக்குப்பதிவு அதிகமாக உள்ள மாவட்டம் - நாமக்கல் 76.43% வாக்குப்பதிவு குறைவாக உள்ள மாவட்டம் - கன்னியாகுமரி 61.95% என பதிவாகியுள்ளது.
1 மணி நிலவரம்
சென்னை மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பகல் 1 மணி நிலவரப்படி பதிவான ஓட்டுசதவீதம் 37.16 என இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
2026-ம் ஆண்டு நடைபெற்று வரும் சட்டசபை தேர்தலில் பகல் 1 மணி நிலவரப்படி 54.58 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
தமிழகம் முழுவதும் இதுவரை 3,25,79,3269 வாக்குகள் பதிவாகி உள்ளது. (பிற்பகல் 1 மணி நிலவரப்படி 56.81 சதவீதம்)
அதிகபட்ச வாக்குகள் பதிவான மாவட்டங்கள்:- திருப்பூர் - 62.97 சதவீதம் நாமக்கல் - 62.51 சதவீதம் ஈரோடு - 61.79 சதவீதம் சேலம் - 61.42 சதவீதம் கரூர் - 60.77 சதவீதம்
இரண்டாம் இணைப்பு
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் காலை 11 மணி நிலவரப்படி 37.56 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.இதுவரை 2,15,40,712 வாக்குகள் பதிவாகியுள்ளன.
முன்னதாக 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 11 மணி நிலவரப்படி 26.29 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
11 மணி நிலவரப்படி மாவட்ட வாரியாக பதிவான வாக்குகள் விவரம் வெளியாகியுள்ளது.
திருப்பூர்: 42.45%, நாமக்கல்: 41.41% ஈரோடு: 41.00% சேலம்: 40.56% கரூர்: 39.70%
வாக்காளப் பெருமக்களே..! விறுவிறுப்பான தேர்தலுக்கு மத்தியில் த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்டுள்ள பதிவு
முதலாம் இணைப்பு
தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 17.69 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், கடந்த முறையை விட அதிகமாக வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதலே வரிசையில் நின்று மக்கள் வாக்களித்து வருகின்றனர்.
அதிக வாக்குப்பதிவு
இந்நிலையில் காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 17.69 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரக் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமானாலும் 2 மணிநேரத்தில் தமிழகத்தில் 1 கோடிக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகத்தில் மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், இதில் 17.69 சதவீதம் பேர் அதாவது 1 கோடி 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வாக்குப்பதிவு தொடங்கிய 2 மணி நேரத்தில் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், இன்று காலை 11 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 37.56 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
ட்ரம்பின் முற்றுகை ஒரு பக்கம்... 34 எண்ணெய்க் கப்பல்களை சாமர்த்தியமாக வெளியேற்றிய ஈரான் News Lankasri
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam