பரபரப்பாக நடைபெறும் தமிழக தேர்தல்! ஒரு மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்ட வாக்குப்பதிவு
தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், நாமக்கல் தொகுதிகுட்பட்ட நல்லிப்பாளையம் வாக்குச்சாவடியில் மின்னணு எந்திரம் பழுதால் வாக்குப்பதிவு ஒரு மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக இன்று (23) தேர்தல் நடைபெறுகிறது.
விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் தமிழக சட்டமன்ற தேர்தல்! வாக்களித்த மறுநொடியில் தவெக தலைவர் விஜய் எழுதிய கடிதம்
ஒரு மணி நேரம்
இந்த தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர்.
இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாமக்கல் தொகுதிகுட்பட்ட நல்லிப்பாளையம் வாக்குச்சாவடியில் மின்னணு எந்திரம் பழுதால் வாக்குப்பதிவு ஒரு மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதன் பின்பு தேர்தல் அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு புதிதாக ஒரு மின்னணு எந்திரம் கொண்டுவரப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது.
முதலில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு எந்திரத்தில் 236 வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில் அந்த வாக்குகளை மீட்பது குறித்து தேர்தல் அலுவலர்கள் ஆலோசித்து வருகின்றனர்.
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam