நாமலின் ஆட்சியில் நான் ஜனாதிபதி! திஸ்ஸகுட்டி ஆராச்சி
நாமல் ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் தான் உத்தியோகபூர்வமற்ற ஜனாதிபதியாக செயற்படவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டி ஆராச்சி தெரிவித்துள்ளார்.
மிஹிந்தலையில் நடைபெற்ற பொதுஜன பெரமுன கட்சியின் நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
உத்தியோகபூர்வமற்ற ஜனாதிபதி..
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், பொதுஜன பெரமுன கட்சியில் நான் ஒன்றும் சாதாரண ஆள் கிடையாது. எனக்கு மேலே நாமல் ராஜபக்ச மாத்திரமே உள்ளார்.

நாமல் ராஜபக்சவிற்கு நெருங்கிய சகா மட்டுமன்றி நெருங்கிய ஆதரவாளனும் நான் தான் நாமல் ராஜபக்ச ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் அவர் உத்தியோகபூர்வமான ஜனாதிபதியாக பதவி வகிப்பார்.
நான் உத்தியோகபூர்வமற்ற ஜனாதிபதியாக செயற்படுவேன் என்றும் திஸ்ஸ குட்டி ஆராச்சி தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam