மின்சார சபை ஊழியர்களின் பிரச்சினைக்கு அநுர அரசே காரணம்! சாமர சம்பத் விமர்சனம்
இலங்கை மின்சார சபை ஊழியர்களின் பிரச்சினைக்கு தேசிய மக்கள் சக்தியே காரணம் என்று பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் விமர்சித்துள்ளார்.
நேற்றைய(23) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி
தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
மின்சார சபை ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் நாடாளுமன்றத்தில் வந்து எங்களிடம் விளக்கம் கூறுகின்றார்கள். ஆனால் அதனால் எந்தப் பலனும் இல்லை.
ஏனெனில் மின்சார சபை ஊழியர்களின் பிரச்சினைக்கு தேசிய மக்கள் சக்தியே காரணம். எனவே நீங்கள் எங்களுக்கு பிரச்சினை குறித்து விளக்கமளிப்பதற்குப் பதில் மின்சார சபை ஊழியர்களுடன், தொழிற்சங்கங்களுடன் பேசி பிரச்சினையைத் தீர்க்க முயற்சியுங்கள்.
எதிர்க்கட்சியான எங்களிடம் அதைப் பற்றி பேசி பயனில்லை. நீங்களே பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



