வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தனுக்கு இன்று தீர்த்த திருவிழா
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லையம்பதி அலங்காரக் கந்தன் மகோற்சவத்தின் தீர்த்த திருவிழா இன்று காலை சுகாதார நடைமுறைகளைக் கருத்தில் கொண்டு பக்தி பூர்வமாக இடம்பெற்றுள்ளது.
கருவறையில் அருள்பாலித்து விளங்கும் அலங்கார கந்தனுக்கும், வசந்த மண்டபத்தில் அருள்பாலித்து விளங்கும் விநாயகர், வேல் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை, சண்டேஸ்வரர் ஆகிய தெய்வங்களுக்கான தீபாராதனைகளும் இடம்பெற்றுள்ளன.
பின் வசந்தமண்டபத்தில் இருந்து அலங்கார வேல்முருகன் பரிவாரத் தெய்வங்களுடன் உள் வீதியூடாக வலம் வந்து தீர்த்தக்கேணியில் தீர்த்தத் திருவிழா இடம்பெற்றுள்ளது.
நவக்கிரகங்களுக்கான மூலமந்திர அனுஷ்டானங்கள் என்பன கேணியில் இடம்பெற்று சண்டேஸ்வரருக்கான நவதான அபிசேங்கள், ஆராதனைகளைப் பிரதம சிவாச்சாரியார் சிவஸ்ரீ சி.வைகுந்தன் குரு தலைமையிலான சிவாச்சாரிய அந்தணர்கள் நடத்தி வைத்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண கோவிட் தொற்று நிலைமை காரணமாக ஆலய அறங்காவலர்கள், அந்தண சிவாச்சாரியார்கள், திருவிழா உபயக்காரர்கள் மட்டும் மகோற்சவத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.









அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri

பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri
