ஒரு இலட்சத்தை அண்மித்த துவிசக்கர வண்டிகளின் விலை
தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக நாட்டில் பலர் துவிச்சக்கர வண்டிகளுக்கு பழகி வருவதாகவும் இதன்காரணமாக உதிரி பாகங்களின் விலை வேகமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
துவிச்சக்கர வண்டி மீண்டும் பிரபலமடைந்து வருவதால் அதிக தேவை ஏற்பட்டுள்ளதாக ஹொரணை வர்த்தகர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.
அதிகரித்த விலை
விற்பனை செய்ய முடியாமல் பல மாதங்களாக ஷோரூம்களில் இருந்த சைக்கிள்கள் இன்று அதிக கிராக்கியுடன் விற்கப்படுகின்றன.
அந்தத் தேவையால், 10,000-15,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட சைக்கிள், இன்று 80,000-95,000 ரூபாய்க்கு விற்கிறோம். அதில், டயர் டியூப் மற்றும் இதர உபகரணங்களின் விலையும், அதை விட அதிகரித்துள்ளது என, வியாபாரிகள் தெரிவித்தனர். அ
குறிப்பாக ஹொரணை, இங்கிரிய, பண்டாரகம, பாணந்துறை, களுத்துறை, மத்துகம போன்ற முக்கிய நகரங்களில் மக்களின் போக்குவரத்துக்கு சைக்கிள் ஒரு வழியாக மாறியுள்ளது.