திருக்கோவில் பகுதியில் டிப்பர் வாகனம்-மோட்டார் சைக்கிள் மோதி விபத்து
அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாண்டியடி நேருபுரம்-பொத்துவில் பிரதான வீதியில் டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ் விபத்தானது இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாகவும், பொத்துவில் பிரதேசத்தில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்து ஏற்பட்டு இருப்பதாக திருக்கோவில் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகள் முலம் தெரியவந்துள்ளது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் பாரிய சேதமடைந்துள்ளதுடன் அதனை செலுத்திச் சென்றவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan