முல்லைத்தீவில் உழவு இயந்திரத்துடன் டிப்பர் வாகனம் மோதி விபத்து
முல்லைத்தீவில் வீதி ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் டிப்பர் வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் முல்லைத்தீவு - கேப்பாபுலவு வீதியில் இன்று (26.10.2024) இடம்பெற்றுள்ளது.
கேப்பாபிலவு புதுக்குடியிருப்பு வீதியில் ஐங்கன்குளத்தில் வயல் வேலைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரம் மீதே டிப்பர் வாகனம் மோதியுள்ளது.
புதுக்குடியிருப்பு பகுதி
இந்நிலையில் புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து முள்ளியவளை நோக்கி வேகமாக வந்த டிப்பர் வாகனமே வேக கட்டுப்பாட்டினை இழந்து விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தின்போது உயிர்சேதம் எதுவும் ஏற்படாவில்லை என முள்ளியவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், உழவு இயந்திரம் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 8 மணி நேரம் முன்

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri

சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த் மனைவிக்கு என்ன ஆச்சு.. கதறி அழும் பொன்னி சீரியல் வைஷ்ணவி.. வைரல் வீடியோ Cineulagam
