12 ஆண்டுகளாக மாயமான பயணிகள் விமானம் தரையிறங்கும்! எதிர்காலம் தொடர்பான டைம் ட்ராவலரின் அதிர்ச்சி தகவல்கள்
சமூக ஊடகத்தில் டைம் ட்ராவலர் என தம்மை அறிமுகப்படுத்தியுள்ள எனோ அலரிக் என்பவர் எதிர்காலத்தில் நடந்தேறும் நிகழ்வுகள் குறித்து தொடர்ந்தும் எச்சரிக்கை விடுத்துவருகின்றார்.
இதற்கமைய அவர் அடுத்த ஆறு மாதங்களில் நடக்கவிருக்கும் சம்பவங்கள் தொடர்பில் தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஏலியன்கள் பூமிக்கு படையெடுக்கும் நாள்
ஏலியன்கள் பூமிக்கு படையெடுக்கும் நாள் தொலைவில் இல்லை என குறிப்பிட்டுள்ள இவர், கடந்த காலங்களிலும் பல எச்சரிக்கைகளை விடுத்துள்ளார்.

இந்நிலையில் 2023 மே மாதத்திற்குள் 5 முக்கிய நிகழ்வுகள் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார்.
இவர் தனது சமூக ஊடக பக்கத்தில் தன்னை டைம் ட்ராவலர் என்பதை மக்கள் நம்ப மறுப்பது தெரியும். இருப்பினும் இந்த ஐந்து முக்கிய நிகழ்வுகளையும் நினைவில் நிறுத்துங்கள் என ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளார்.
ஐந்து நிகழ்வுகள்
அந்த பட்டியலில் உலகில் 10 பேர்கள் ஒரே நாளில் சூரியனின் உச்ச சக்தியை பெறுவார்கள் என குறிப்பிட்டுள்ளார். இது நவம்பர் 14, 2022ல் நடக்கும் எனவும், ஆனால் தாமதமாக வெளிவரும் என்று தெரிவித்துள்ளார்.
அடுத்ததாக பூமியின் பிரதிபலிப்பான ஒரு கிரகத்தை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அடையாளம் காணும் என தெரிவித்துள்ளார்.
12 ஆண்டுகளாக மாயமான பயணிகள் விமானம் ஒன்று 2022 டிசம்பர் 12ம் திகதி பத்திரமாக தரையிறங்கும் எனவும், அந்த விமானப் பயணிகள் எவருக்கும் வயது மூப்பு பாதித்திருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

2023 பெப்ரவரி மாதம் நான்கு இளைஞர்கள் அரிய கருவி ஒன்றை கைப்பற்றுவார்கள் எனவும், அதன்வாயிலாக விசித்திர காட்சிகளை காண்பார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக 2023 மே மாதம் இதுவரை கண்டிராத மாபெரும் சுனாமி ஒன்று ஏற்படும் எனவும், கலிபோர்னியாவை மொத்தமாக அது தாக்கும் எனவும், சான் பிரான்சிஸ்கோ அழிந்துபோகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், இவரது தகவலுக்கு பார்வையாளர்கள் பலர் கிண்டலடித்துள்ளதுடன், திரைப்படங்கள் பார்த்து மூளை மழுங்கிவிட்டதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும் அதிர்ஷ்டம் கொண்ட டாப் 3 ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
அண்ணன்கள் வீட்டில் ஏற்பட்ட அவமானம், அழுத கோமதிக்கு வந்த சந்தோஷ செய்தி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கொண்டாட்ட எபிசோட் Cineulagam