பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நேரம் மாறுகின்றது!
பிரித்தானியாவில் ஞாயிற்றுக்கிழமை முதல் நேரத்தில் மாற்றம் ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த வாரம் முதல் மக்கள் ஒரு மணி நேரம் தூக்கத்தை இழக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை முதல் ஞாயிறு வரையிலான இரவில், பிரித்தானியாவில் கோடை காலத்திற்கு மாறுகின்றது. இதனால் சூரிய ஒளியை மேலதிகமாக ஒரு மணி நேரம் பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும். அதற்கமைய, ஒரு மணி நேரம் முன்னோக்கி செல்வோம் என பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, இந்த மாற்றம் மின்னணு சாதனங்களில் தானாகவே மாற்றமடையும் என்பதால் கையடக்க தொலைபேசி போன்றவற்றில் நேரங்கள் சரியான முறையில் பார்க்க முடியும். எனினும் சுவரில் உள்ள கடிகாரங்கள் மற்றும் அலாரம் கொண்ட கடிகாரங்களில் மக்கள் நேரத்தை மாற்றி வைக்க வேண்டும்.
திங்கட்கிழமை வாரத்தைத் தொடங்கும் போது ஏற்படும் சிறிய குழப்பத்தை தவிர்க்க நேரத்தை சரியான முறையில் மாற்றிக் கொள்ள வேண்டும் என பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
1976ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நேர மாற்றம் ஐரோப்பிய ஒன்றியத்தின் முயற்சிக்கமைய 2021ம் ஆண்டிற்கு பின்னர் முடிவுக்கு கொண்டு வருவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ம் திகதியன்று ஐரோப்பிய ஒன்றியம் 2019 முதல் நடைமுறைக்கு வரவிருந்த நேர மாற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் திட்டத்தை முன்வைத்தது.
எனினும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள சில உறுப்பு நாடுகள் இந்த யோசனைக்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டும் இந்த திட்டம் தொடர்ந்து நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
