தெஹிவளையில் வங்கப் புலிக்குட்டிகள் (Photos)
தெஹிவளை விலங்கியல் பூங்காவில் பிறந்த வங்கப் புலிக்குட்டிகளை பார்வையிட பொது மக்களுக்கு நேற்று முதல் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த புலிக்குட்டிகள் இரண்டு மாதங்களுக்கு முன்னர் பிறந்துள்ளன.

சீனாவின் விலங்கியல் பூங்கா ஒன்றில் இருந்து கடந்த 2009 ஆம் ஆண்டு தெஹிவளை விலங்கியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்ட ரொபின் என்ற வங்கப் புலி மற்றும் கெல்ல என்ற பெண் புலிக்கும் இந்த புலிக்குட்டிகள் பிறந்துள்ளன.
இந்த புலிக்குட்டிகள் ஆண் குட்டிகள் என விலங்கியல் பூங்கா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். புலிக்குட்டிகள் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் தினமும் சிறிது நேரம் பொதுமக்கள் அவற்றை பார்வையிட அனுமதி வழங்கப்படும் எனவும் விலங்கியல் பூங்காவின் பணிப்பாளர் திலக் பிரேமகாந்த தெரிவித்துள்ளார்.

சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri