தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட செயலாளருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அழைப்பாணை
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளைச் செயலாளர் வீரவாகு விஜயகுமார், பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
இன்றையதினம் (18.03.2023) அவருக்கு வழங்கப்பட்டுள்ள எழுத்துமூல அழைப்பாணையில், வாக்குமூலம் ஒன்றைப் பெறுவதற்காக எதிர்வரும் 2023.03.24 ஆம் திகதி, மு.ப.9.00 மணிக்கு, பரந்தனில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவுக்கு சமுகமளிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அழைப்பாணை
ஏற்கனவே கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள, கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று உள்ளூராட்சி மன்றங்களினதும் தவிசாளர்கள் உள்ளிட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒன்பது உறுப்பினர்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், கட்சியின் மாவட்டக்கிளைச் செயலாளராக இருந்து சமூகநலப் பணிகளிலும், அரசியற் பணிகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திவரும் வீரவாகு விஜயகுமார் தற்போது விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.