மக்களே அவதானம்!காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இன்றைய(07.03.2023) காலநிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மக்களுக்கு எச்சரிக்கை
மேலும் வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இடியுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதிக சம்பளம் வாங்கும் வேலையை விட்டுவிட்டு ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., ஆனால், கிராமமே எதிர்ப்பு News Lankasri
