நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வங்களா விரிகுடாவில் காணப்பட்ட குறைந்த அழுத்த நிலைமை இலங்கையின் கிழக்கு பகுதியில் தொடர்ந்தும் நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
இதனால் நாட்டின் அநேக பகுதிகளில் பிற்பகலில் இடியுடன்கூடிய மழை பெய்யும் என எதிர்வு கூறியுள்ளது.
மேல், சபரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களில் பிற்பகல் 1.00 மணியின் பின்னர் சுமார் 75 மில்லி மீற்றர் அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.
இடியுடனான மழை பெய்யும் போது ஓரளவு பலத்த காற்று வீசும் எனவும், இடி மின்னல் தாக்கம் ஏற்படக் கூடிய சாத்தியங்கள் உண்டு எனவும் இதனால் மக்கள் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri