நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற கைது நடவடிக்கைகள்
கல்குடா
ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று சந்தேகநபர்கள் கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாசிக்குடாவில் வைத்து செய்யப்பட்டுள்ளனர்.
காகித ஆலை இராணுவப்புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய கல்குடா பொலிஸாருடன் இணைந்து மேற்கொள்ள அதிரடி நடவடிக்கையின் போதே இவர்கள் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரில் 33, 36 வயதுடைய இருவர் காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், 38 வயதுடைய ஒருவர் மன்னாரைச் சேர்ந்தவராவார்.
சந்தேகநபர்களிடமிருந்து 22 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கோப்பாய்
கோப்பாய் பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை மின்சார சபையுடன் கோப்பாய் பொலிஸாரும் இணைந்து நடத்திய சோதனையில்
நேற்றுமுன்தினம் (16) சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற ஒருவர் கைது செய்து
பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு நீதிமன்றில் பிணையில்
விடுவிக்கப்பட்டுள்ளார்.
யாழ்.வடமராட்சி
யாழ்.வடமராட்சி, நெல்லியடியில் போதைப்பொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லியடி பொலிஸார் மோப்ப நாயுடன் நேற்று நடத்திய தேடுதலின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேடுதல் பணி
கரணவாய், தும்பளை, குடவத்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20 - 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து 80 கிராம் கஞ்சாவும், 83 மில்லி கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக நெல்லியடி பொலிஸ் நிலைய
தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
