வவுனியாவில் போதைப்பொருளுடன் மூன்று இளைஞர்கள் கைது
வவுனியா, பாவற்குளம் பகுதியில் மூன்று இளைஞர்கள் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக உளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, உளுக்குளம் பொலிஸார் இன்று (15.11.2022) விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, வவுனியா பாவற்குளம் பகுதியில் உள்ள பன்சாலை வீதி ஊடாக சென்ற மூன்று இளைஞர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பொலிஸார், அவர்களை சோதனை செய்த போது அவர்களிடம் இருந்து 50 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை

இதனையடுத்து குறித்த மூன்று இளைஞர்களும் உளுக்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 18 - 25 வயதிற்குட்பட்ட வவுனியா சூடுவெந்தபுலவு மற்றும் பாவற்குளம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை
எடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 4 மணி நேரம் முன்
சன் டிவியில் புனிதா, மணமகளே வா சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... ரசிகர்கள் ஷாக் Cineulagam