யாழில் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
யாழ். நகர்ப் பகுதி முச்சக்கரவண்டித் தரிப்பிடத்தில் இருந்து கட்டணமானி பொருத்தாத முச்சக்கர வண்டிகளை அகற்றும் நடவடிக்கையை யாழ்ப்பாணம் போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
குறித்த நடவடிக்கை இன்று (03.08.2023) காலை முதல் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து கட்டணமானி பொருத்தாக முச்சக்கரவண்டிகள் சேவையில் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டாது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு
யாழ். மாவட்டத்தில் வாடகைக்கு செலுத்தும் முச்சக்கரவண்டிகளுக்கு கட்டணமானி பொருத்தாமையினால் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்கள் அதிகளவில் வசூலிக்கப்படுவதாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
