தனியார் பேருந்துடன் முச்சக்கர வண்டி மோதி கோர விபத்து! ஒருவர் பலி - 4 பேர் படுகாயம்
தனியார் பேருந்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்திற்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 8 வயது குழந்தை உட்பட நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கண்டி தலதா மாளிகையில் (21) ஆம் திகதி அதிகாலையில் நடைபெற்ற பூஜையில் கலந்துகொண்டு எரமுல்லவில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த குடும்பத்தினர், கட்டுகஸ்தோட்டை ஹுலங்கங்குவ பகுதியில் எதிர் திசையில் கண்டி நோக்கிச்சென்ற தனியார் பேருந்துடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.
இதனையடுத்து இவர்கள் கண்டி மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேருந்தின் சாரதி கைது
இந்த விபத்தில் உயிரிழந்தவர் எரமுல்ல, மந்தாரநுவர, வாட்கும்புரேவைச் சேர்ந்த கல்யாணி ஜெயசுந்தரா என்ற 45 வயது பெண் ஆவார்.
விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் ஹகுரன்கெத்த பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள், முச்சக்கர வண்டியின் சாரதி தூங்கியதால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
இந்த விபத்து தொடர்பில் தனியார் பேருந்தின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri