முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்து : இருவர் படுகாயம்(Photos)
திருகோணமலை - ஹொரவ்பொத்தானை பிரதான வீதி பம்மதவாச்சி பகுதியில் முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இவ்விபத்து இன்று (18) மாலை 5.00மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கோமரங்கடவல பகுதியிலிருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு நோயாளர் ஒருவரைப் பார்வையிடச் சென்ற போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் கோமரங்கடவல- மதவாச்சி பகுதியைச் சேர்ந்த 56 மற்றும் 52 வயதுடைய ஆகிய இருவர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளான காட்டுப்பகுதியில் இருப்பதுடன் விபத்து
தொடர்பில் மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


                                            
                                                                                                                                    
    
    
    
    
    
    
    
    
    
    Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan