முச்சக்கரவண்டிக் கட்டணம் அதிகரிக்கப்படாது என அறிவிப்பு
முச்சக்கரவண்டிகளின் கட்டணம் அதிகரிக்கப்படாது என முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர அறிவித்துள்ளார்.
நேற்று நள்ளிரவு முதல் பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நியாயமற்ற விடயம்
அவர் மேலும் தெரிவிக்கையில், இதற்கு முன்னர் பல தடவைகளில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது. அந்த சந்தர்ப்பங்களில் முச்சக்கரவண்டிகளின் கட்டணம் குறைக்கப்படவில்லை.
அவ்வாறான நிலையில் நேற்றிரவு எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதன் காரணமாக முச்சக்கரவண்டிகளின் கட்டணத்தை அதிகரிப்பது நியாயமற்றது.
கட்டண அதிகரிப்பிற்கான தீர்மானம்
அதுமாத்திரமன்றி முச்சக்கரவண்டிகளின் வாடகைக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான முடிவை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் அந்தந்த மாகாணங்களின் பொதுப் போக்குவரத்து ஆணைக்குழுக்கள் மூலமாகவே மேற்கொள்ள வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
