முச்சக்கரவண்டி கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு முச்சக்கரவண்டிகளுக்கு மேலும் பத்து லீட்டர் எரிபொருளை வழங்க அனுமதித்தால் முச்சக்கரவண்டி கட்டணங்கள் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்
இது தொடர்பான கலந்துரையாடல் கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாக அவர் கூறியுள்ளார்.
இந்த கலந்துரையாடலின் போது எரிபொருள் ஒதுக்கீட்டை மேலும் 10 லீட்டர் அதிகரிப்பதற்கு ஜனாதிபதியின் ஆலோசகர் தீர்மானத்திற்கு வந்ததாக ஜயருக் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மேலதிக எரிபொருள் தொகையை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை
எடுக்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சருக்கு அவர் பரிந்துரை
செய்துள்ளதாகவும் ஜயருக் தெரிவித்துள்ளார்.

அட்டகாசமான வசூல் வேட்டையில் சசிகுமாரின் Tourist Family பாக்ஸ் ஆபிஸ்... 7 நாளில் எவ்வளவு வசூல்? Cineulagam

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri
