இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்தாக மாறும் முச்சக்கர வண்டி சாரதிகள்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சில முச்சக்கரவண்டி சாரதிகள் இந்த நாட்டிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் நியாயமற்ற முறையில் பணம் அறவிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
சில வாரங்களுக்கு முன்னர் ஹிக்கடுவ புகையிரத நிலையத்திற்கு அருகில் வெளிநாட்டவர்கள் குழுவொன்று இவ்வாறான சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
கையடக்கத் தொலைபேசி செயலி மூலம் முன்பதிவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டியில் அந்த வெளிநாட்டவர்கள் தங்களின் தங்குமிடத்திற்கு செல்வதற்கு திட்டமிட்டுள்ளனர். எப்படியிருப்பினும் ஹிக்கடுவ புகையிரத நிலையத்திற்கு அருகில் இருந்த சில முச்சக்கர வண்டி சாரதிகள் குறித்த வெளிநாட்டவர் கையடக்கத் தொலைபேசி மூலம் முன்பதிவு செய்திருந்த முச்சக்கரவண்டியை அந்தந்த இடத்திலிருந்து விரட்டியடித்துள்ளனர்.
இவ்வாறான சம்பவங்கள் நாட்டின் சுற்றுலாத்துறைக்கு மிகவும் பாதகமான சூழ்நிலையை உருவாக்குவதாக அமெரிக்காவின் ஜோன் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் வளவாளர் கலாநிதி சஞ்சய் பெரேரா சுட்டிக்காட்டினார்.
நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த நாட்டின் அழகினை சுதந்திரமாக அனுபவிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது பொறுப்பு வாய்ந்த துறைகளின் பொறுப்பாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இவ்வேளையில் நாட்டுக்கு வரும் வெளிநாட்டினருக்கு சிறந்த முறையில் ஆதரவளிப்பது மக்களின் கடமையாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 14 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
