முச்சக்கரவண்டி சாரதி படுகொலை - மார்புப் பகுதியில் இரத்தக்கசிவு ஏற்பட்டிருந்ததாக தகவல்
கம்பஹா மாவட்டம், கந்தானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கந்தானை, சாந்த செபஸ்தியன் மாவத்தைப் பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் இந்த படுகொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் பேலியகொடை துட்டுகெமுனு மாவத்தைப் பகுதியைச் சேர்ந்த அன்ருவ் ஜோசப் வின்சன் பேர்னாட் (வயது 51) என்ற நபரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
முச்சக்கரவண்டியை வாடகைக்கு அமர்த்திச் சென்றபோது இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த நபரின் மார்புப் பகுதியில் இரத்தக்கசிவு ஏற்பட்டிருந்ததாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மேலும் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது.
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 17 மணி நேரம் முன்
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
தமிழில் ரீமேக் ஆகப்போகும் தெலுங்கில் ஹிட் சீரியலான Chamanthi... யார் நடிக்கிறார்கள் பாருங்க... Cineulagam
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam