நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: ஒருவர் பலி (Photos)
புஸ்ஸலாவ பகுதியில் நிறுத்தி வைத்திருந்த கார் ஒன்றுடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்ததோடு, பெண் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் புஸ்ஸலாவ சரஸ்வதி மத்திய கல்லூரிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருடன் குறித்த முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்து இன்று காலை 9.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக புஸ்ஸலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்ததோடு, அதில் பயணித்த பெண் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 70 வயதுடைய டீ.எம்.ருபாநந்த என அடையாளம் காணப்பட்டுள்ளார். விபத்து தொடர்பில் புஸ்ஸலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri
