முச்சக்கர வண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்து - மூவர் படுகாயம்
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய போரதீவில் இன்று இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பெரிய போரதீவு காளி கோவிலுக்கு முன்பாக களுவாஞ்சிகுடியில் இருந்து வந்த முச்சக்கர வண்டியும், 39ஆம் கிராமத்தில் இருந்து வந்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது 39ஆம் கிராமத்தில் இருந்து வந்த முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேருக்கு நேர் முச்சக்கர வண்டிகள் மோதிய நிலையில் ஒரு முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து காரணமாக இரண்டு முச்சக்கர வண்டிகளும் கடும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.









ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் நுழைந்த ட்ரக்: சோதனையிட்ட அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri
