யாழில் ஏற்பட்ட விபத்து: சாரதி வைத்தியசாலையில் அனுமதி
முச்சக்கரவண்டியும், குளிரூட்டி வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் - கொடிகாமம், இராமாவில் பகுதியில் இன்று நண்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டி சாரதியான கொடிகாமம் - வெள்ளாம்போக்கட்டியை சேர்ந்த எஸ்.யுகிந்தன் என்ற இளைஞனே விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.
சாவகச்சேரி பகுதியிலிருந்து கொடிகாமம் நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி இராமாவில் பகுதியில் வலது பக்கமாக அல்லாரை வீதிக்குத் திரும்ப முற்பட்ட வேளை பின்னே பயணித்த குளிரூட்டி மோதியுள்ளது.
இதன்போது முச்சக்கர வண்டி 50 மீற்றர் வரை தள்ளிச் சென்றுள்ளது. இதில் முச்சக்கரவண்டி மோசமாகச் சேதமடைந்துள்ளது.
அத்துடன் முச்சக்கரவண்டி சாரதி படுகாயங்களுக்குள்ளாகி ஆபத்தான நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam
