தலவாக்கலையில் முச்சக்கர வண்டி விபத்து: இருவர் காயம்
தலவாக்கலை நகரத்திலிருந்து தலவாக்கலை தோட்டப்பகுதியை நோக்கி அதிவேகமாக பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றின் முன் சில்லு திடீரென கழன்று விழுந்ததில், முச்சக்கரவண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இருவர் காயமடைந்ததாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு காயமடைந்தவர்கள் தற்போது லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தலவாக்கலை பொலிஸார் விசாரணை
இந்த விபத்து ஹட்டன்–நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலைப் பகுதியில் உள்ள புத்த சிலைக்கு அருகில், நேற்று (03) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றது.
அதிவேகமாக பயணித்த முச்சக்கர வண்டியின் முன் சில்லில் ஏற்பட்ட திடீர் இயந்திர கோளாறே விபத்திற்குக் காரணமாக இருந்ததாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் தலவாக்கலை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
வெறிபிடித்த நபரிடமிருந்து பலரை வீரத்துடன் காப்பாற்றிய பிரித்தானியர்: சுயநினைவு திரும்பியதும் கூறிய வார்த்தை News Lankasri
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan