இலங்கையில் தங்கத்தின் விலையில் மீண்டும் மாற்றம்
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால் இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து வருகின்றன.
நேற்றைய விலையுடன் ஒப்பிடும்போது இன்று தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 344,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.
தங்கத்தின் விலை அதிகரிக்கும் அபாயம்
அதேவேளை, 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 315,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.
    
இதேவேளை, எதிர்வரும் ஆண்டில் தங்கத்தின் விலை வரலாறு காணாத ரீதியில் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தேசிய இரத்தினக்கற்கள் மற்றும் நகைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, உலக தங்க சந்தையில் 5000 டொலர் வரை தங்கத்தின் விலை பதிவாகக்கூடும் என்றும் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
    
    
    
    
    
    
    
    
    
    மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
    
    ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam