மூதூரில் விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி : சாரதி பலி
மூதூர் (Mutur) பொலிஸ் பிரிவிலுள்ள பெரியபாலம் பகுதியில் முச்சக்கர வண்டியும், சிறிய ரக கெப் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியின் சாரதி உயிரிழந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியிலுள்ள மூதூர் -பெரியபாலம் பகுதில் இன்று (24) பகல் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
சம்பவத்தில் உயிரிழந்தவர் முச்சக்கர வண்டி சாரதியான மூதூர் -ஆனைச்சேனையைச் சேர்ந்த ஹதியத்துல்லாஹ் நஸீர் (வயது 62) என்பவர் என தெரிய வந்துள்ளது.
முன்னால் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியின் மீது, சிறிய ரக கெப் வாகனம் பின்னால் இடித்து மோதியதில் இவ் விபத்து சம்பவித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் மூதூர் பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை கெப் வாகனச் சாரதி மூதூர் பொலிஸில் சரணடைந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
