நானுஓயாவில் முச்சக்கர வண்டி வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்து - மூவர் காயம்
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் பங்கலாவத்த பகுதியில் இன்று (08.11.2025) சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் மிகவும் பலத்த காயங்களுக்குட்பட்ட நிலையில், நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தலவாக்கலை பகுதியில் இருந்து உடப்புசல்லாவ நோக்கி பயணம் மேற்கொண்ட முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இந்நிலையில், குறித்த விபத்தில் முச்சக்கர வண்டிக்கு அதிக சேதம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri