முச்சக்கரவண்டி கட்டணத்திலும் உயர்வு! பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்
எரிபொருள் விலை அதிகரிப்பின் காரணமாக உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது முச்சக்கரவண்டி கட்டணமும் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இரண்டாவது கிலோமீட்டருக்கான முச்சக்கரவண்டி கட்டணமானது 90 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டி கட்டணம்
இந்த கட்டண அதிகரிப்பானது இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுவதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு |
எனினும் முதல் கிலோமீற்றருக்கு 100 ரூபா என்ற கட்டணத்தில் மாற்றம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட முச்சக்கரவண்டி கட்டண உயர்வின்படி முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணம் 100 ரூபாவாகவும், இரண்டாவது கிலோமீற்றர் முதல் ஒவ்வொரு கிலோமீற்றருக்குமான கட்டணம் 80 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டிருந்தது.
எரிபொருள் விலையேற்றத்தின் எதிரொலி! இன்று முதல் அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு |
பேருந்து கட்டணம்
இதேவேளை பேருந்து கட்டணங்களை 35 சதவீதத்தால் அதிகரிக்குமாறு அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

விஜய் டிவியில் இருந்து பிரியங்காவிற்கு கொடுக்கப்பட்ட பரிசு.. பதறிய தொகுப்பாளினி, அப்படி என்ன கொடுத்தாங்க? Cineulagam

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri
