அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம்
அமெரிக்காவின் (America) ஆர்கன்சாஸ் மாநிலத்தின் பல்பொருள் அங்காடி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் இரு பொலிஸார் உட்பட்ட 10 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவத்தின் போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கிதாரியும் காயமடைந்துள்ளார்.
மேலும், அவர் தற்போது பொலிஸாரின் கண்காணிப்புடன் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதல் சம்பவம்
இந்நிலையில், துப்பாக்கி சூட்டு தாக்குதலுக்கான காரணங்கள் இன்னும் வெளியாகவில்லை.

அதேவேளை, அமெரிக்காவில் திறந்த துப்பாக்கிச் சந்தை காரணமாக, நாள்தோறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்களும் உயிரிழப்புகளும் பதிவாகி வருவதாக கூறப்படுகின்றது.
மேலும், இந்த சம்பவங்களில் தீவிரவாத சம்பவங்களும், தனிப்பட்ட சம்பவங்களும் அடங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri
சந்தோஷ செய்தியை வெளியிட்டுளள சிறகடிக்க ஆசை வெற்றி மற்றும் அவரது மனைவி... ஆனா இது வேற நியூஸ் Cineulagam