கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மூன்று பெண்கள் அதிரடியாக கைது
சட்டவிரோதமாக பாங்கொக்கிலிருந்து நாட்டிற்குள் கடத்திவரப்பட்ட போதைப்பொருள் தொகையுடன் பெண்கள் மூவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து 5 கிலோகிராமிற்கும் அதிகமான 'குஷ்' மற்றும் 2.4 கிலோகிராம் 'ஹஷீஷ்' போதைப்பொருள் தொகை மீட்கப்பட்டுள்ளன.
போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினர் விசாரணை
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினரால் (PNB) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இவர்கள் அத்துமீறி போதைப்பொருட்களை கடத்த முற்பட்ட வேளையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்கள் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், 31, 36 மற்றும் 38 ஆகிய வயதுடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்! மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை