யாழ். கொழும்புத்துறை பகுதியில் போதை மாத்திரைகளுடன் மூவர் கைது
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்புத்துறை பகுதியில் நீண்ட நாட்களாக போதை மாத்திரை வியாபாரத்தில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நே்று (20) யாழ்ப்பாணம் பொலிஸ் போதை பொருள் ஒழிப்பு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இரகசிய தகவல்
இது தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது 180 போதை மாத்திரைகளுடன் 18, 24 ,22 வயதுடைய 03 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் கொழும்புத்துறையை சேர்ந்த மூன்று இளைஞர்களாவர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam