முல்லைத்தீவு பகுதியில் வாள்கள், பொல்லுகளுடன் தாக்குதல் நடத்த முயன்ற மூவர் கைது
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உண்ணாப்புலவு பகுதியில் வாள்கள் மற்றும் பொல்லுகளுடன் தாக்குதல் நடத்த வந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்கேதநபர்கள் மூவரும் நேற்றைய தினம் பொலிஸாரிடம் சிக்கியுள்ளதாக தெரியவருகிறது.
சந்கேதநபர்கள் வாள்கள் மற்றும் பொல்லுகளுடன் உண்ணாப்புலவு பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்த வந்துள்ளனர்.
இந்த நிலையில் வீட்டு உரிமையாளர் மீது தூள் வீசிவிட்டு தாக்குதல் நடத்த முற்பட்ட வேளை வீதியால் சென்ற இளைஞர் ஒருவர் சம்பவத்தை அவதானித்து ஊர் மக்களை அழைத்துள்ளார்.
இதன்போது சந்தேகநபர்கள் இருவர் தப்பிச் செல்ல முற்பட்ட வேளை மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை இவர்களை ஏற்றி வந்த முச்சக்கரவண்டி சாரதியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து மூவரிடமும் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.














6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam
