தென் இந்தியாவில் மூன்று இலங்கை பிரஜைகள் கைது
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக, தென் இந்தியாவின் கேரளா, அங்கமாலியில் மூன்று இலங்கை பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரள மாநில பயங்கரவாத தடுப்புப் படையுடன் ஒருங்கிணைத்து தமிழ்நாடு கியூ-கிளை காவல்துறையினர் இவர்கள் மூவரையும் அங்கமாலிக்கு அருகிலுள்ள கிடங்கூர் என்ற இடத்தில் வைத்து இன்று கைது செய்தனர்.
கல்வியியல் கல்லூரி ஒன்றுக்கு அருகில் உள்ள வாடகை வீடு ஒன்றில் இவர்கள் வசித்து வந்தனர்.
அங்கமாலியில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மற்ற இருவர் அதானி என்ற இடத்தில் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் இவர்கள் மூவரும் நெடும்பசேரியில் உள்ள காவல் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கிடங்கூரில் கைது செய்யப்பட்டவர், தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்தார் என்று தெரியவந்துள்ளது. இந்த மூவரும் தமிழகத்தில் பதிவான பிற குற்றங்களிலும் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலி அடையாள அட்டைகளைப் பயன்படுத்தியே இவர்கள் கேரள அங்கமாலியில் தங்கியிருந்தனர் என இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.





ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam

டிரம்புக்கு வயது 79 இல்லை…வெறும் 65 வயது தான்! மருத்துவ அறிக்கை வெளியிட்ட வெள்ளை மாளிகை News Lankasri
