குவைத் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை : சிக்கிய 3 இலங்கையர்கள்
போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை தொடர்பாக, மூன்று இலங்கையர்கள் உட்பட ஏழு பேரை குவைத் பாதுகாப்புப் படைகள் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சிறப்புச் சோதனையின்போது இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட பொருட்கள்
வெளிநாட்டு ஊடக அறிக்கைகளின்படி, அந்தக் குழுவில் மூன்று இலங்கையர்கள், இரண்டு குவைத் குடிமக்கள், ஒரு இந்தியர் மற்றும் மேலும் இரண்டு வெளிநாட்டினர் அடங்குவர்.

இந்த நடவடிக்கையின்போது ஹஷிஷ், ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகள் உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் எடை அளவிடும் மற்றும் பொதி செய்யப் பயன்படுத்தப்படும் உபகரணங்களும் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர்களும், கைப்பற்றப்பட்ட பொருட்களும் மேலதிக விசாரணைக்காக குவைத்தின் குற்றவியல் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா 190 அணு குண்டுகள் வரை உருவாக்கியிருக்கலாம் - விரைவில் பிரித்தானியாவை முந்த வாய்ப்பு News Lankasri