ஈரானில் தொடரும் போராட்டங்கள் - படையினரால் மூவர் கொடுமாக சுட்டுக் கொலை
ஈரானில் மஹ்சா அமினியின் மரணம் தொடர்பாக ஏற்பட்டுள்ள அமைதியின்மை காரணமாக எதிர்ப்பாளர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் குறைந்தது மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக காரில் ஒலி எழுப்பிய ஒருவர் உள்ளிட்ட மூவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையத்தில் பகிரப்பட்ட காணொளியில் கழுத்தில் சுடப்பட்ட பெண் ஒருவர் மயங்கி தரையில் கிடப்பதைக் காட்டுகிறது.
அமினி தனது தலைமுடியை சரியாக மறைக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரினால் தெஹ்ரானில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். 22 வயதான மஹ்சா அமினி கைது செய்யப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு செப்டம்பர் 16 அன்று பொலிஸ் தடுப்பில் இருந்த போது உயிரிழந்தார்.
அமினி தலையில் அடிபட்டதால் இறக்கவில்லை
இந்நிலையில், வெள்ளியன்று, ஈரானின் தடயவியல் மருத்துவ அமைப்பு, மஹ்சா அமினி பெருமூளை ஹைபோக்ஸியாவால் பல உறுப்பு செயலிழப்பால் உயிரிழந்தார் என்றும் தலையில் அடிபட்டதால் அல்ல என்றும் தெரிவித்துள்ளது.
இஸ்லாமியக் குடியரசில் செப்டம்பர் 17ஆம் திகதி தொடங்கிய போராட்டங்களில் இருந்து இதுவரை 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக உரிமைக் குழுக்கள் கூறுகின்றன. போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக பல நகரங்களில் கடைகள் மூடப்பட்டன,
தெஹ்ரானின் முக்கிய நகரங்களில் சிலர் பொலிஸ் நிலையங்களுக்கு தீ வைத்தனர் மற்றும் பாதுகாப்புப் படையினரை விரட்டியடித்தனர்.
இந்நிலையில், தெஹ்ரானில் உள்ள நகரை அடையும் போராட்டங்கள் ஈரானிய தலைவர்களுடன் எச்சரிக்கை மணியை அடிக்கும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.