துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சியில் மூன்று பொலிஸாருக்கு நேர்ந்த கதி!
பொலிஸ் பயிற்சி கலாசாலையில் நடைபெற்ற, துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சியில் பொலிஸ் விசேட அதிரடிப்படை உறுப்பினர்கள் மூவர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கலாசாலையில் நடைபெற்றுள்ளது.
பயிற்சி
பயிற்சி நடவடிக்கையின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தின் போது, துப்பாக்கிச் சன்னம் அங்கிருந்த தகடு ஒன்றின் மீது பட்டு அதன் துண்டுகள் வீசியெறியப்பட்டதன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது அதிரடிப்படையின் களுத்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் சார்ஜண்ட் ஒருவர் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் தற்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri