யாழில் பணத்திற்காக திரண்டவர்களால் வழங்கியவருக்கு நேர்ந்த கதி
யாழ். நெல்லியடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மதவடி பகுதியில் நூற்றுக்கணக்கானோருக்கு தலா 2000 ரூபா அடிப்படையில் பணம் வழங்கிக் கொண்டிருந்த நபர் உள்ளிட்ட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஊரடங்கு அமுலில் இருந்த சந்தர்ப்பத்தில் சுகாதார விதிமுறைகளை மீறி மக்களை திரட்டி உதவித் தொகை வழங்கிய குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் நெல்லியடி பொலிஸாரால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமராட்சி பகுதியில் வாழும் வறிய மக்களுக்கு உதவி தொகையாக ஒருவருக்கு தலா 2000 ரூபாய் வீதம் நபரொருவர் உதவி தொகை வழங்கியுள்ளார்.
இந்த நிலையில் பணத்தை பெறுவதற்காக சுகாதார விதிமுறைகளை மீறி பெருமளவானோர் அவ்விடத்தில் ஒன்று கூடியுள்ளனர்.
இது குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த நெல்லியடி பொலிஸார் உதவி தொகை பெற வந்த மக்களை அங்கிருந்து உடனடியாக அப்புறப்படுத்தியுள்ளனர்.
அத்துடன் உதவி தொகை வழங்கியவர், அதற்கான ஏற்பாடுகளை செய்தவர் உள்ளிட்ட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதேவேளை மக்களுக்கு பணம் வழங்கிய நபர், ஒருவருக்கு 2000 ரூபாய் வீதம் சுமார் 500இற்கும் மேற்பட்டோருக்கு பணம் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பரபரப்பு வீடியோ... இதோ Cineulagam
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam