கடலில் நீராட சென்ற மூவர் மாயம்: அம்பாறையில் சம்பவம்
கடலில் நீராட சென்ற மூவர் காணாமல் சென்ற சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சங்கமன்கண்டி உமிரி கடற்கரையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, குறித்த சம்பவத்தில் தாண்டியடி உமிரி கடற்கரையில் நீராடச்சென்ற தந்தை மகன் மற்றும் அவர்களின் உறவினரின் மகன் என மூவர் நேற்று(25.12.2024) மாலை காணாமல் சென்றுள்ளனர்.
இவ்வாறு காணாமல் சென்றவர்களை தேடும் பணியில் கடற்படையினர் மற்றும் கடற்றொழில் சமுகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
மேலும், திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கமன்கண்டி தாண்டியடி உமிரி பகுதியில் கிறிஸ்துமஸ் தினமான நேற்று கடற்கரையில் பொழுதை கழிக்க சென்ற தாண்டியடி உமிரி கிராமத்தை சேர்ந்த 38, 15, 18, வயதை சேர்ந்தவர்களே கடல் அலையில் சிக்கி காணாமல் போயுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
