லண்டனில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதல் - மூவர் வைத்தியசாலையில் அனுமதி
மத்திய லண்டனில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் படுகாயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி கொள்ளை முயற்சி ஒன்றை தடுக்க முற்பட்ட போது கத்தியால் குத்தப்பட்ட 3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு அல்லது மூன்று இளைஞர்கள் ஒரு நடுத்தர வயதுடைய ஒருவரை பிடிக்க முயற்சித்ததாகவும், முகமூடி அணிந்த ஒருவர் கத்தியுடன் இருந்ததைக் கண்டதாக நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர்களைத் தேடி வரும் பொலிஸார்
வியாழன் காலை தாக்குதலின் போது, அவ்வழியாக சென்றவர்கள் சிக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை சந்தேகத்திற்கிடமான கொள்ளையாகக் கருதி, இரண்டு சந்தேக நபர்களைத் தேடி வருவதை பொலிஸார் உறுதிப்படுத்தினர்.
லண்டன் ஆம்புலன்ஸ் சேவை (LAS) துணை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததுடன் நால்வருக்கு சிகிச்சை அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் மூன்று பேர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்களின் காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என்று கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 5 மணி நேரம் முன்

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam

SBI சேமிப்பு திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்து ரூ.32 ஆயிரம் வட்டியை பெறலாம்.., என்ன திட்டம் தெரியுமா? News Lankasri

பிரித்தானியாவில் அரங்கேறிய பயங்கரம்! வீட்டினுள் வைத்து சுட்டுக்கொலை..பெண் உட்பட இருவர் கைது News Lankasri

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam
