பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மூவர்! நீதிபதி இளஞ்செழியன் பிறப்பித்துள்ள உத்தரவு

Vavuniya Sri Lanka Magistrate Court Ilanseleyan
By Thileepan Nov 06, 2024 11:06 AM GMT
Report

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான தீங்கு விளைவிக்கும் ஆயுதங்களை உடமையில் வைத்திருந்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட மூவர் நீதிமன்ற விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் (M. Ilancheliya) தலைமையில் இன்று(06.11.2024)  இடம்பெற்ற விசாரணையின் அடிப்படையில் அவர்கள்  விடுவிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா பெரியபுளியாளங்குளம் பகுதியைச் சேர்ந்த, சிறிசுப்பிரமணியம் கிரிசா, கந்தப்பு கஜேந்திரன், மற்றும் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த காகைசிங்கம் காந்தரூபன் ஆகிய சந்தேக நபர்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நீதித்துறையில் வெள்ளி விழாவை பூர்த்தி செய்யும் முதல் தமிழ் நீதிபதியாக மாணிக்கவாசகர் இளஞ்செழியன்!  (Photo)

நீதித்துறையில் வெள்ளி விழாவை பூர்த்தி செய்யும் முதல் தமிழ் நீதிபதியாக மாணிக்கவாசகர் இளஞ்செழியன்! (Photo)

சாளம்பைக்குளம் பகுதி

கடந்த 2019 ஆண்டு தை மாதம் வவுனியா, சாளம்பைக்குளம் பகுதியில் தீங்கு விளைவிக்க கூடிய ஆயுதங்களான கிளைமோர் குண்டுகளை உடமையில் வைத்திருந்தனர் என்று கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த மூவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், பொலிஸ் விசாரணையின் அடிப்படையில் பீ அறிக்கை தயார் செய்யப்பட்டு வவுனியா நீதவான் நீதிமன்றில் சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மூவர்! நீதிபதி இளஞ்செழியன் பிறப்பித்துள்ள உத்தரவு | Three People Released Under The Pta Act Crisis

குறித்த வழக்கு தொடர்பில் நீதிமன்றில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் சந்தேகநபர்கள் மூவரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இதன்படி நீதவான் நீதிமன்றில் விசாரணைகள் நிறைவுபெற்று சட்டமாஅதிபர் திணைக்களத்தின் ஆலோசனைகள் பெறப்பட்டு 1996 ஆண்டின் 18 ஆம் இலக்க தீங்குவிளைவிக்கும் ஆயுதசட்டம் 2(1)ஆ பிரிவின் கீழ் குற்றம் புரிந்துள்ளதாக எதிரிகளான மூவருக்கும் எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரசதரப்பு வழக்கு தொடுனரால் சந்தேகத்துக்கு அப்பால் இறை ஒப்புச்சாட்சியங்கள் சமர்ப்பிக்க தவறியமையால் சட்டவிதிகள் வழக்கத்தில் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மன்னாரில் கனியவள மணல் அகழ்வுக்கு எதிராக ஒன்று திரண்ட மக்கள்

மன்னாரில் கனியவள மணல் அகழ்வுக்கு எதிராக ஒன்று திரண்ட மக்கள்

வழக்கு விசாரணை

மேல் நீதிமன்றில் இது தொடர்பான வழக்கு விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தநிலையில் இன்றையதினம் தீர்ப்புக்காக தவணையிடப்பட்டிருந்தது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மூவர்! நீதிபதி இளஞ்செழியன் பிறப்பித்துள்ள உத்தரவு | Three People Released Under The Pta Act Crisis

அந்தவகையில் தீர்ப்பை அறிவித்த மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் எதிரிகளான மூவரையும் விடுவித்து தீர்ப்பளித்தார்.

குறித்த வழக்கில் இரசாயன பகுப்பாய்வு அறிக்கை தவிர்ந்து எவ்விதமான ஒப்புதல் சான்றிதழ்களும் வழக்கு தொடுனரினால் சமர்ப்பிக்க தவறியுள்ளதாக நீதிபதி மா.இளஞ்செழியன் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளதுடன், அரச தரப்பின் நியாயமான சந்தேகங்களிற்கு அப்பால் தவறு இழைக்கப்படவில்லை என்ற அடிப்படையில் பிரிவு 134 இன் சான்று கட்டளை சட்டத்தின் பிரகாரம் தீர்ப்பளிக்கப்பட்டு குறித்த மூவரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு கிடைத்த அனுமதி! ரணிலுடன் முரண்படும் ஹரிணி

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு கிடைத்த அனுமதி! ரணிலுடன் முரண்படும் ஹரிணி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US